88929 25504
 
  • Total Visitors: 3752375
  • Unique Visitors: 310006
  • Registered Users: 35966

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கைத்தறி ஆய்வாளர்களுக்கு பயிற்சி வகுப்பு:

Reference : http://www.thinaboomi.com/2015/10/06/50069.html

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 146 கைத்தறி ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளோருக்கான பயிற்சி வகுப்பை நேற்று காலை சென்னை, அண்ணா நகர், நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா துவக்கி வைத்தார்.

கைத்தறித் தொழிலானது இந்தியாவில் மிகப்பெரிய குடிசைத் தொழிலாக இருந்து கிராமப்புற மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றது. தமிழ் நாட்டில் கைத்தறித் தொழில் சீரிய பொருளாதார செயல்பாடுகள் கொண்ட தொழில்களில் ஒன்றாக இருப்பதோடு, 1.89 லட்சம் நெசவாளர் குடும்பங்களில் உள்ள 3.19 லட்சம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வசித்து வரும் கிராமம் மற்றும் புறநகர் பகுதிகளில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 1163 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 1080 பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும், 83 பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும், 2.86 லட்சம் நெசவாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். மைய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நெசவாளர்களை சென்றடைகின்றன.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் 20 சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர்கள், கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர்கள் உள்ளனர். கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மற்றும் சேலம் சரகங்கள் ஆகிய 2 சரகங்கள் இயங்கி வருகின்றன.

இயக்குநரகம் மற்றும் சரக உதவி, துணை இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் உதவி இயக்குநர் (அமலாக்கம்) அலுவலகங்களில் உதவி இயக்குநர் பதவி நிலைக்கு அடுத்ததாக துணிநூல் கட்டுபாடு அலுவலர், முதுநிலை தொழில் நுட்ப உதவியாளர், கைத்தறி அலுவலர், கைத்தறி ஆய்வாளர், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற பதவி நிலைகளில் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மேற்படி பதவி நிலைகளில் உதவி இயக்குநர் , முது நிலை தொழில் நுட்ப உதவியாளர், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் கைத்தறி ஆய்வாளர் பணி இடங்கள் தமிழ் நாடு அரசு தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. கைத்தறி மற்றும் துணிநூல் துறையை பொறுத்தமட்டில் கைத்தறி ஆய்வாளர் பணியிடம் மிகவும் முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவியாகும்.

இத்துறையில் 1996 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, கைத்தறி ஆய்வாளர் பதவி நிலையில் 146 பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேற்படி 146 கைத்தறி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை துறையால் 25.09.2015 அன்று வழங்கப்பட்டது. புதியதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள கைத்தறி ஆய்வாளர்கள், துறையில் செயல்பாட்டினையும், இத்துறையினால் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், கூட்டுறவு சட்ட விதிகள், மற்றும் அரசு பணியாளர் நடத்தை விதிகள் ஆகியவற்றையும் அறிந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிட ஏதுவாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறை பற்றிய அறிமுகம், துறையில் மேற்கொள்ளப்படும் பணிகள், துறை மூலம் அரசால் செயல்படுத்தப்படும் நெசவாளர்கள் நல மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், பொதுவான அரசு அலுவலக நடைமுறை, கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகள் ஆகிய இனங்களை பாடத் திட்டமாக கொண்ட 3 நாள் அறிமுகப் பயிற்சி சென்னை, அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் இன்று முதல் நடைபெறுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை, தூத்துக்குடி மாவட்டம் எட்டைய புரத்தில் உள்ள பாரதி கூட்டுறவு நூற்பாலை, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய 5 கூட்டுறவு நூற்பாலைகள் ரூ.147.21 கோடி செலவில் அரசு நிதி உதவியுடன் நவீனமாக்கப்பட்டுள்ளது. மேலும், செயலிழந்திருந்த ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையும் ரூ. 28.02 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு, அக்கூட்டுறவு நூற்பாலைகளுக்கு 16 ஆலை மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கான பணி நியமன ஆணைகளையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா வழங்கினார்.

இவ்விழாவில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், கைத்தறி மற்றம் துணிநூல் இயக்குநர் வெங்கடேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை கூடுதல் இயக்குநர் முனைவர் க.கர்ணன், இணை இயக்குநர்கள், நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் டாக்டர் பி. ஜெகநாதன், அமுதா அருணாசலம், பெருந்தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், கூட்டுறவு நூற்பாலைகள் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Image: 
Categories: 
Share Share
Scroll to Top