88929 25504
 
  • Total Visitors: 4385698
  • Unique Visitors: 495339
  • Registered Users: 36769

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

 மனூர் குல தேவாங்க ஸ்ரீ அகஸ்திய மகரிஷி கோத்திரம் ஓசூர் லத்திகாரர் வங்குசம்


கோவிலின் பெயார் : ஸ்ரீ வீர அக்கம்மாள் திருக்கோவில்

முதன்மை கடவுள்  : ஸ்ரீ வீர அக்கம்மாள் & ஸ்ரீ சென்றாய பெருமாள்

இதர கடவுள் : சென்ராயா பெருமாள் புற்று ரூபம், தசவரதார மூர்த்திகள், அஷ்டலக்ஷ்மி, அகஸ்தியர்


குலம் : லத்திகாரர்

கோத்திரம் : அகஸ்திய மஹா ரிஷி கோத்திரம்

                    

மட்டமனை : ஓசூர் லத்திகாரர்

 ஊர் : செம்பாண்டம்பட்டி, ஓமலூர், சேலம், தமிழ்நாடு  

 


கோவிலின் வரலாறு :

வீர அக்கம்மா தேவதையின் வரலற்று சுருக்கம்:

     முன் ஒரு காலத்தில் ஏனாதி நகரமென்று சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய திரு நகரத்தில் அகத்திய மஹா ரிஷி கோத்திரம் மனூர் குல தேவாங்க மரபினர் என்ற ஓசூர் லட்திகாரர் என்னும் தேவாங்க குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்கள் ஆதி முதல் வீர வைணவ சமயத்தை சார்ந்தவர்களாகவும், ஏனாதி திரு நகரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சென்றைய பெருமாள் தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். 

அந்த மரபில் சான்றோராய்த் திகழ்ந்த ஒரு தேவாங்க குடும்ப தவப்புதல்வியாக கற்பு கடம் பூண்ட காரிகையாய்த் தோன்றிய பெண்ணரசி அக்கம்மா. தற்போது வீர அக்கம்மா என்னும் பெயார் கொண்ட தெய்வமாய் விளங்கும் பெண் தெய்வம்.

இதத்கைய தெய்வம்சம் கொண்ட வீர பெண்மணிக்கு தக்க பருவம் வந்த காலத்தில் திருமணம் செய்ய வேண்டி பெரியோர்கள் பலரும் கூடி தகுந்த நாயகனாக சன்றோன்மை மிக்க இளம் பருவ வாலிபனாக அடுத்த கோத்திரத்தில் ஓர் வீர மணமகனை தேர்ந்தெடுத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.
அது போது மணப்பந்தலில் மலர் மாலை சூடி மங்கல நான் அணிவிக்கும் முன்பு சுல்தானின் இஸ்லாமிய படைகள் மனப்பந்தலில் உட்புகுந்து எதிர்தோரை வெட்டி மடித்து பொன்னும் பொருளும் கொள்ளை கொண்டனர். அந்தச்சமயம் மனகோலம் கொண்ட மணமகன் பகைவரை எதிர்த்து வீர மரணம் அடைந்தார். அது கண்டு அக்கம்மா மணப்பந்தலில் வளர்தத ஓம குண்டத்தில் விழுந்து உயிர்நீத்தாள். அதை கண்ட பெரியோர்கள் தங்கள் குல மகளுக்கு வீர அக்கம்மா என்று பெயர் சூட்டி வணங்கினர்.

அன்று முதல் பண்ணிரண்டுகள் கழித்து ஓம குண்டத்தில் உயிர்நீத்த இடத்தில் புற்று வடிவாமாக பெண் தெய்வமான திருவுவம் வெளிப்பட்டது. அது கண்டு தந்தை வழி தாயாதிகள்  மகிழ்ந்து தங்கள் குல மகளாகிய வீர பெண் தெய்வத்திற்கு கோவிலெடுத்து பண்ணிரண்டுக்கு ஒரு முறை மகாமகம் கூடும் பொழுது விழாவெடுத்து சீரும் சிறப்பும் செய்து மகிழ பெரும் விருப்பம் கொண்டனர்.  

அதற்காக பெரியோர்கள் பலர் கூடி ஆலோசித்து வகுகின்ற நாளில் மறல் ஏளார்  என்ற அருள்வாக்கு சொல்பவர் பெரியார் முன்வந்து குல மகளாகிய வீர அக்கம்மா புற்று வடிவமாக தோன்றி உள்ளபடியால் மணமகனாகிய வீர திருமகனும் இம்மன்னுலகில் தோன்றியுள்ளார் அதையும் கண்டு பிடித்து மணமகள் மணமகன் இருவருக்கும் விழாவெடுத்து பூஜிப்பிர்களாக என்று கூற அதை கேட்ட பெரியோர்கள் அதுவும் நன்மையே என்று ஆர்வம் கொண்டு தங்கள் சமயவழி சார்ந்த குல தெய்வமான ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயதில் நிமித்தம் கேட்க விரும்பினர்.

அதுபோது மணமகன் தந்தையான கொண்டு செட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தின் வடபுறம் தம் மனையில் துயல் கொண்டிருக்க அவரது கனவில் மணமகன் தோன்றி நான் நமது குல தெய்வமான ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் சதுர வடிவமான உருவத்துடன் யானும் அருவமாக ஒன்றியுள்ளேன். ஒவ்ஒரு ஆண்டும் மாசி மகம் கூடும் பொழுது எனது  உருவத்த்தை வளர்ச்சியாக காணலாம். இது விபரம் வீர அக்கம்மா தந்தை வழி தாயாதிகளுக்கு சொல்லுக என்று உரைத்து மீண்டும் சென்றாய பெருமாள் ஆலயத்தில் சென்று மறைந்தார்.

 அவ்வாறு கனவில் கண்ட விவரத்தை கொண்டு செட்டி வீர அக்கம்மா தந்தை வழி தாயாதிகளுக்கு கூற பெரியோர்கள் யாவரும் மாசி மகாத்தில் ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயம் சென்று அங்கு அருவம் தோன்றியுள்ளதை கண்டு ஆனந்த கண்ணீர் சொரிந்து  அபிசேக ஆரதனை செய்து பட்டு பீதாம்பரம் உடுத்தி பன்னிரு சுவையும் சேர பாலபிசேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் தங்கள் குல தெய்வத்துடன் ஒன்றிய காரணத்தால் ஸ்ரீ சென்றாய பெருமாள் தெய்வத்துக்கு பண்ணிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பெரிய விழா எடுத்து அங்கவஸ்திரம் அடையுடுத்தி வாகனமேற்றி மேளதாளதுடன் ஊர்வலமாக ஸ்ரீ வீர அக்கம்மா திருக்கோவிலுக்கு அழைத்து சென்று தீபதூப நெய்வேதியங்கள் செய்து அனுப்புவதை தொன்று தொட்டு இன்று வரை நடந்துவரும் வழி முறையாகும். 

ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலின் வரலாறு :

சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏனாதி என்ற சிறு நகரம் சீரும் சிறப்பும் மிக்க நகரமாக விளங்கியது அந்த நகரத்தின் மக்கள் நெசவு மற்றும் விவசாய தொழிலை பிரதானமாக செய்து வந்தனர் அந்த நகர த் தின் சுற்றிலும் நெல் வயல்கள் சூழப்பட்டு இருந்தன.  ஏனாதி நகரமானது தூய காற்றும் நீர் வளம் மிக்கதாக விளங்கியது.

கள்வர்களாலும் பகைவர்களாலும் நெருங்க முடியாதபடி காடுகளும் சூழ்ந்து காணப்பட்டன. ஏறியில் எ ப் போ தும் நீரின் அளவு கரை யின் விளிம்பு வரை இருந்து கொண்ட இருந்தது. ஆதி கேசவன் ஆலயம் தெற்கேயும் இப் பூவுலகத்தை அருள் செய்து வரும் ஈசன் ஆலயம் மேற்கே கொண்டதாகவும் மாரியை கொடுக்கும் மாரி ஆலயம் வடக்கே இருக்க எல்லையை காட்கும் பத்திரகாளி கிழக்கே இருந்து ஏனாதியின் எல்லையாய் நின்று நகரின் செழிப்பை கா த் து வந்தன. இன் நகரின் வடக்கு திசையில் எழுந்தருளியுள்ள சென்றைய பெருமாள் ஆலயம் தோன்றிய விதத்தை காண்போம்.

சீர் மிகு ஏ நா தி நகரதில் மகளுக்கும் எவ்விதமான பஞ்சமும் இல்லை என்பதாகும் உணவு பண்டங்கள் தேவைக்கு அதிகமாகவே விளைந்து வந்தன. அதே போல் நெற்களஞ்சியம் எங்கு நோகினும் நெற்குவிலல்களுடன் காணப்பட்டு வந்தன. இத்தகைய  நெற்களஞ்சியங்களில் ஒன்று கொண்டப்ப செட்டியாருடையது. அவரின் நெற்களஞ்சியத்தில் நெல்குவியால் ஒன்று பல நாட்கள் கவனிக்காமல் இருந்த கரணமாக அந்நெல்குவியாலின் மேல் புற்று ஒன்று தோன்ற ஆரம்பிடுவிட்டது. ஒரு நாள் கொண்டப்ப செட்டியார் தனது களஞ்சியத்தை சுற்றி நோக்கும் பொழுது ஒரு நெல்குவியாலின் மேல் புற்று ஒன்று தோன்றியத்தை கண்டு அதை அகற்ற உத்தரவிட்தார். வேலை ஆட்கள் அந்த புற்றை அகைற்றுவதற்காக அருகில் சென்ற பொழுது உள்ளிருந்து பெரிய நாகம் ஒன்று தோன்றி அகற்றும் பணியை செய்யவிடாமல் துரத்தியது. இந்த விஷயம் கொண்டப்ப செட்டியாருக்கு சொல்லப்பட்டது.

அன்று இரவு அவர் துயில் கொண்டிருந்த பொழுது அவருக்கு அருகில் நாகம் தோன்றி நான் பாற்கடலில் திருமாலுக்கு குடையாக விளங்கும் அதிசேசனின் வழி வந்தவன் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கும் இந்த ஏனாதி நகரத்தில் எழுந்தருளி இருக்கிறேன்.

நான் குடிகொண்டுள்ள செந்நெல்  புற்றினை அழிக்கவேண்டாம் நீங்கள் வணங்கும் திருமாலின் உறைவிடமாக இந்த செந்நெல்  புற்று விளங்குவதால் பூஜை செய்து வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும் என்று கூறியது.

கொண்டப்ப செட்டியாரும் செந்நெல் புற்றாநது தான் வணங்கும் மஹாவிஷ்ணுவின் இருப்பிடம் என்றறிந்து மகிழ்வுற்று அந்த புற்றுக்கு செந்நெல்ராயன் சுவாமி என பெயரிட்டார். ராயன் என்பது பெயரின் ஈற்றினில் வண ங் குவதற்குரிய சொல்லாகும்.

நாளடைவில் சென் நெல் ராயன் என்னும் பெயர் சென்னராயன் என்று வழங்கி இப்போது ஸ்ரீ விஷ்ணு வின் பெயர் பெருமாள் என்று ஈற்றில் சேர்க்கபட்டு ஸ்ரீ சென்றாய பெருமாள் என்று அழைக்பட்டு வருகிறது.

கொண்டு செட்டியார் திருமாலின் உறைவிடமான செந் நெல் புற்றினை மூலஸ்தானமாக கொண்டு ஒரு கோவில் கட்டி முடித்தார் கோவிலின் வடபுறம் செட்டியார் அவர்கள் வாழ்ந்து வந்தார் என்பது கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. 

இத்தகைய வரலாறு கொண்ட ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயமானது செந் நெல் நெற்களஞ்சியத்தில் ஸ்ரீ சென்றாய பெருமாள் நான்கு சதுர வடிவில் தோன்றி வளர்ந்தபின் சுமார் முன் நூறு ஆண்டுகள் அந்த களஞ்சியத்தையே கோவிலாகக் அமைத்து வணங்கி வந்துள்ளனர் அப்படி வணங்கி வந்த பக்தர்களில் ஏனாதி நகரில் வாழ்ந்த தேவாங்கர்கள் முதன்மையானவர்களாக இருந்தனர்.

அவர்களின் பெரும் முயிற்சியால்  ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயமானது 13-14 ஆம் நூறாண்டில் கோவில் கட்டி வழிபாடு செய்து வந்தனர் என்பது வரலாறு. கோவிலில் இருக்கும் கல்வெட்டின் படி கொண்டு செட்டியாரே இத்திருப்பணிஇல் முதன்மையாக விளங்கினார் என்பதும் அவரே மணமகனின் தந்தை என்பதும் தெரியவருகிறது. இன்றுவரை ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி ஏகாதசியில் கொண்டு செட்டி பூஜை என்ற பெயரால் ஸ்ரீ சென்றைய பெருமாள் திருக்கோவிலுக்கு வடைக்கில் மதிலை ஒட்டிய கல்வெட்டு உள்ள இடத்தில் இன்றும் பூஜை நடைபெறுகிறது.

 

ஏனாதி நகரத்திலும் அதன் அருகில் செம்மனஹள்ளி போன்ற ஊர்களில் வாழ்ந்து வந்த மனூர்குல தேவாங்க ஓசூர் லட்திகாரர்கள் ஸ்ரீ சென்றைய பெருமாள் தெய்வத்தை குல தெய்வமாக கொண்டு வழிபாடு செய்து வந்தனர். ஓசூர் லட்திகாரர் குடும்ப பெண் மகளான அக்கம்மாவிகற்கு தங்கள் பெற்றோர்கள் திருமணம் செய்ய எண்ணி கொண்டு செட்டியின் மகனை திருமணம் நிச்சயம் செய்தனர். அக்கம்மாவிகற்கு திருமணம் செய்யும் நாளில் மங்கல நாண்கட்டும்  மும்பு சுல்தானின் படைகள் வந்து திருமணத்தை தடை செய்து போர் புரிந்தது. மணமகன் எதிரி படைகளை கொன்று குவித்தார் அந்த போரில் தானும் வீர மரணம் எய்தினர். வீர மரணம் அடைந்த மணமகனின் ஆன்மா ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்திலுள்ள புற்றிநில் இரண்டறக் கலன்தது நம் முன்னோர் கூறிவரும் வரலாறாகும்.

அதனால் தங்கள் குலதெய்வமாகிய ஸ்ரீ சென்றாய பெருமாளுக்கும் குடும்ப தெய்வமாகிய அக்கம்மா தேவதைக்கும் பண்ணிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் 60 ஆம் கூடி பெருவிழ சீரும் சிறப்புமாக வழிவழியாக கொண்டாடப்பட்டு வருகிறது.


கோவிலின் சிறப்பு :

கல்வெட்டு விபரம் :

"கொண்டப்ப திருப்பணி" என்றும்
சென்றாய பெருமாள் கோவிலுக்கு
"வடக்கு குடி அமைந்தோன்" என்றும் குறிப்பு காண படுகிறது.  

கோவில் ஸ்லோகம் :

ஸ்ரீ சென்றாய பெருமாள் துதி

மன்னுமருள் கொடுக்க மாநிலத்திலோங்குகுல  
சென்றாயபெருமாள் சீரடிகள் - சென்னிமிசை
சூடிமுறை கொண்டு கோத்திரம் செய்ய மனம்
நாடுவோ மென்றும் நலம்

ஸ்ரீ வீர அக்கம்மா துதி

ஆதியாம் மனர்குல தேவாங்கவம்மீசத்தாம்  அகஸ்திய மகரிஷி
யாவரின் கோத்திரமுற்று  செந்நெல்வயல் சூழ் ஓசூர் அம்பதியில் வாழ்ந்தவர்க்கு
ஜொதியெனுஞ் சக்தியே கருக்கொண்டு இவ்வுலகில் தோன்றினாளென்ன ஈடில்
சுந்தரமமைந்தா சிசுவாகி பால்யத்திலும் திருமாலின்திருவடியை
ஓதி சதாபக்தி செயும் உத்தமப் பெண்பாவை ஒளிர் மணக்கோலத்தோடு
ஓங்கு சுடராக்கினி பிரவேச முற்றாளின் உறவு நீங்காது பெற்று
நீதி வழுவா வீர அக்கம்மாளேனும் கற்பு நேரிழையை நாம் நினைத்து
நித்தம் நித்தம் போற்றிபக்தி மனத்திலூட்டி நேராய் வணங்குவோமே.

கோவில் பாடல் :

ஸ்ரீ வீர அக்கம்மா துதி

1.

விண்ணெழு தாரகையின் விளங்கிய கற்பு பூண்டு
மண்ணிலே மலர்ந்து நின்ற மன நிறை தெய்வமாகி
விண்ணுளோர் போற்றும் வீர அக்கம்மா எனும் பேர் சொல்லி
தண்ணொளி கமலப் பாதம் தழைத்திட வணக்கம் செய்வோம்.

2.

ஆதியம் மனு குலத்தில் அரிய தேவாங்க மென்னும்
நீதி சேர் அகத்தியன் தன் நெறிவளர்க் கோத்திரத்தே
பாதியில் உயிரை நீத்துப் பாரிலே புகழே கொண்ட
ஓதியாள் மணக் கோலத்து உயர்ந்ததோர் தன்மை சொல்வாம்.

3 .

மெய்மையைப் போற்றிவந்த மெல்லியன் அக்கமாளும்
தூய்மையாய்ப் பெரியோர் கூடி துணைவனைத் தேர்ந்த நாளில்
பொய்மையும் களவும் செய்யும் புல்லர்கள் வரவினாலே
தெய்வமாய் நின்று வீர அக்கம்மாள் எனும் பேர் கொண்டாள்.

 

மணமகன் தோற்றம்

4.
கள்ளவில் துளபமாலை கார் முகில் கமலகண்ணன்
பள்ளிகொள் களஞ்சியத்தே பாரில் வந்து தோன்றி
தெள்ளிய உருவமாக தேவனின்  அருவங்கொண்டு
வெள்ளிசேர் மகாமகதில் விளங்கினார் மாசித்திங்கள்

5.

செந்நெல்லால் நிறைந்து வந்த சிறப்புறு களஞ்சியத்தே
சென்நெலில் பிறந்த சென்நெல் ராயனே எனத்துதித்து
சென்றாயனென்று  சான்றோர் சீர்மிகு நாமஞ் சூட்ட
குன்றாத வழிமுறையல் குல தெய்வமாக கொண்டார்

6.

கொண்டப்பன் சான்றோர் குடியிருந்தமைந்த இல்லம்
எண்டிசை புகழேமேவும் ஏனாதி நகரந்தன்னில்
பண்டைநாள் புதியமைத்தப் பார்ப்புகழ் களஞ்சியத்தே
மண்ணுளோர் போற்றும் வண்ணம் மலர்ந்தனன் தெய்வமாக

7.

மண்ணகம் மலர்ந்தபின்னே மதிவளர் கொண்டப்பனாரும்
கண்வளர்போதில் ஓர்நாள் கனவிலே தோன்றியங்கு
விண்ணகத்திருந்து வந்த வேதநாயகன் யான்னென்று
திண்ணமாய் உரைத்து மீள சென்றனன் களஞ்சியத்தே

8.

உரைத்த நாள் அன்று தொட்டு உளமகிழ் பக்தர் எல்லாம்
சிரத்தையாய் தேவருக்கு திருவமுதருத்திப் பின்னே
உரைமுடை செங்கல்லாலே ஊர்மக்கள் பலருங்கூடி
சிரமது பணிந்து வாழ்த்திச் சென்ராயன் கோவில் கண்டார் 

9.

இன்றைக்கு ஏழுநூறாண்டும் எண்ணிய அருப்தோடு
தொன்மையாம் பழமைசேர தொள்ளாயிரம் ஆண்டு காலம்
வன்மையாய் வளர்ந்துவந்துவந்தனை வழிபாடெய்தி
குன்றாத வழி முறையால் குடிகளும் பூசை செய்தார் 

10.

ஈண்டிய குழுக்கள் சேர்ந்து இறைவனை பணிந்து போற்றி
பண்டைநாள் படதியமைத்த பார்புகழ் மூதாதையாரே   
கொண்டலர்சேர் நிறத்தான் நாமம் கொண்டதோர் பக்தர் தோன்றி
மண்ணகம் மலர்ந்து போற்ற மாயவன் பணிகள் ஏற்ப்பார்

11.

அகத்திய கோத்திரத்தார் அரிய தேவாங்கரெல்லாம்
சகத்தினில் ஓங்கி நின்று சற்குணச் செல்வராக
உகத்தினில் ஒருவனாக ஒளிர்ந்திடும் ஆதி மூர்த்தி
அகத்தினில் பக்தி ஏற்க அருள் தரக்கடவன் மாதோ

12.

குல தெய்வமாகி நின்று கோவில் கொண்டெழுந்த தேவன்
தலமது சிதயாவண்ணம் தலைமுறை கொண்டபக்தர்
வலமதுகரத்தினாலே வான்பொருள் வழங்கி (மேன்மை
குலமது தழைக்க செய்யும் கோனடிபணிந்து வாழ்க

13.

வந்திடும் பக்தகோடி வழங்கிடும் பொருளை ஏற்று
செந்திரு செந்நெல் மேவும் சென்றாய தேவனார்க்கு
வந்திடும் பொருள்கள் கொண்டு வளமுறு ஆலயத்தை
வந்தனை வழிபாடெய்தி வகுப்பது கடமையாகும்

 

பண்டைய ஏனாதி நகரம்

14.

நீரினாலும் காற்றினாலும் நிகழ்வுறு வேடிப்பினாலும்
வாரிலின் கொதிபினாலும் வளமுறு காட்டினாலும்
பாரினில் கள்வராலும் பகைவராலும் கொள்ளயாலும்
ஆரினும் குற்றம் சேர அமைந்திட்ட நல்ல நாடே

15.

ஆல்வளர் மாயன் ஆதி கேசவன் தெற்கே நிற்க
தொல்லுலகளிக்கும் ஈசன் துணை என்று மேற்கே நிற்க
பல்லவர் வணங்கும் மாரி புதியது வடக்கே நிற்க
எல்லையாய் கொண்ட பத்திரகாளியும் கிழக்கே நிற்க

 

ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவில்

16.

இந்நகர்தனில் வடக்கு எழுந்தருள் பிரான் சென்றாய
முன்நகரக் கொண்டதேவன் மூவருள் பெருமானென்று
அந்தமாய் ஆதியாகி அருள்புரி பொருளுமாகி
பந்தாமாய்ப் பாருக்கெல்லாம் அருள் பாலித்து அருளி நின்றான்.

17.

ஆதலால் அவன்பேர் சொல்லி ஆதியில் வடிவு கொண்ட
பாதமேகதி யென்றெண்ணி பாடலால் துதிக்க நோர்ந்தான்
காதலால் காவியத்தை கவிகளால் பாடவந்தான்
வேத நாயகன் தாள் போற்றும் வெங்கடாசலம் என்பானே 

 

நன்றி : மேற்கண்ட வரலாற்று கதையும் செய்யுளும் அருளிய ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்த திரு வெங்கடாசலம்

சுவாரசியமான உண்மைகள் :

பூஜை நேரம் :

கோவிலின் முக்கிய விழாகள் :

ஆண்டு விழா : தை திங்கள் இரண்டாம் நாள்

60-ஆம் கூடி சுவாமி கும்பிடுதல் : பண்ணிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை

கோவில் கமிட்டி பெயார் : அருள்மிகு ஸ்ரீ வீர அக்கம்மாள் திருக்கோவில் டிரஸ்ட்

தலைவர் : உயர்திரு. பண்டி R. சென்றாய செட்டியார்

செயலாளர் : உயர்திரு. Er. G. நாகராஜன், B.E.,

பொருளாளர்உயர்திரு. K. திருப்தி செட்டியார்

உதவி தலைவர்கள்:

உயர்திரு. Er. C. தனக்கோட்டி,D.E.E.,  ததகாபட்டி.
உயர்திரு. R. தியகராஜன், கொமாரபாளையம்.
உயர்திரு. P. ரங்கசாமி, குகை, சேலம்
உயர்திரு. R. ராஜேந்திரன்,  சேலம் (செம்பாண்டம்பட்டி)  

இணை செயலாளர்கள்:

உயர்திரு. M. உமாநாத், D.T.D & W.,  பவானி
உயர்திரு. Er.V. ஒசள்ளி நடராஜன், L.E.E., ஓமலூர்
உயர்திரு. A. பெருமாள், பெங்களூர்
உயர்திரு. S.C சென்றாயன் பழனிசாமி திருப்பூர்
உயர்திரு. K. சரவணன் கொண்டலாம்பட்டி

சட்ட ஆலோசகர் :

உயர்திரு. V. பொன்முட, B.A., M.L., M.Phil.,

டிரஸ்ட் நியமன உறுபினர்கள்  :

உயர்திரு. C.D.R. சீனிவாசன், சீலனயகன்பட்டி.
உயர்திரு. S.S. அரங்கனுர் ராமமூர்த்தி, குகை, சேலம்.
உயர்திரு. C. ஜெயசந்திரன், ஈரோடு.
உயர்திரு. S. துரைசாமி செட்டியார், பெங்களூர்.
உயர்திரு. D. சீனிவாசன், மைசூர்.
உயர்திரு. A. கோபால் செட்டியார், கொண்டலாம்பட்டி.
உயர்திரு. P. வெங்கடாசலம் திருப்பூர்.
உயர்திரு. J. வெங்கடாசலம் சாவக்கட்டுபளையம்.
உயர்திரு. K.T. கோவிந்தராஜு செட்டியார், கள்ளியாம்புதூர்.
உயர்திரு. M.G. கார்த்திகேயன், ஓமலூர்,
உயர்திரு. S. மானூர் ராமலிங்கம், ஆயிகவுண்டம்பாளயம்.
உயர்திரு. M. கவேரிசெட்டி, கருமலைகூடல்.
உயர்திரு. M. ஜெயராமன், காடபளையம்.
உயர்திரு. R. ஜனார்தனன், புதுசாம்பள்ளி.
உயர்திரு. R.K.N.V. சேவகபெருமாள், குகை, சேலம்

கோவிலின் முகவரி : அருள்மிகு ஸ்ரீ வீர அக்கம்மாள் கோவில்,  செம்பாண்டம்பட்டி, ஓமலூர் வட்டம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு - 636309

கோவிலின் தொலைபேசி எண் : 954290-248765

பேருந்து வழிதடம் : ஓமலூர்,

புகைஉந்து வழிதடம் : செம்பாண்டம்பட்டி , சேலம்

வான் வழிதடம் : சேலம்

 

இந்த கட்டுரையை இனையதள பக்கதில் பதித்தவர்:

Article By : Senthil Kumar Krishna Swamy, MCA, PGDBA, CCNA, CCNP, ITIL, ISO IEC / 20000

Image: 
Categories: 
Share Share
Scroll to Top