88929 25504
 
  • Total Visitors: 3752357
  • Unique Visitors: 310002
  • Registered Users: 35966

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

சிம்மாசனங்களும் குருபீடங்களும் 

நன்றி : காடுபட்டி சௌடாம்பிகா இளைஞர் அணி

நன்றி : ர. பார்த்திபன்

சிம்மாசனங்களும் குருபீடங்களும் தோன்றிய வரலாறு:-

தேவல முனிவரை முதன்மையாக கொண்டு தோன்றிய தேவாங்க வம்சம் பத்தாயிரம் குலங்களாகப் பெருகி வளர்ந்தது. தேவாங்கர்கள் பற்பல இடங்களுக்கும் பரவினார்கள். இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஆசாரம் குறையாமல் வாழவேண்டும் என்று தேவதாசமய்யனின் குமாரனான "ஏகோராமன்" கருதினார். இவர் தேவாங்க வம்சத்திற்கு பல ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வகுத்து, அவற்றை கண்காணித்து பாதுகாக்கும் வகையில் சில ஆட்சி முறைகளையும் வகுத்து கொடுத்தார். அம்முறைகளையே இன்றும் நாம் கடைபிடித்து வருகின்றோம்.

ஏகோராமன் அமைத்துக் கொடுத்த இரண்டு அமைப்புகள் முறையே சிம்மாசனங்கள், குருபீடங்கள் என்று வழங்கப்படுகிறது. குல ஒழுக்கங்களையும் கட்டுபாட்டையும் காத்து நீதி வழங்கும் சான்றோர்கள் "சிம்மாசனாதிபதிகள்" என அழைக்கப்பட்டனர். குல ஆசாரம், தெய்வ வழிபாடு முதலியவற்றை காத்து ஒழுங்குபடுத்தும் சான்றோர்கள் "குருபீடாதிபதிகள்" எனவும் அழைக்கப்பட்டனர். பழங்காலத்தில் பல சிம்மாசனங்களும் குருபீடங்களும் இருந்தன, ஆனால், இக்காலத்தில் சிம்மாசனங்கள் நான்கும். குருபீடங்கள் ஐந்தும் மட்டுமே உள்ளன

சிம்மாசனங்கள்:-

தேவாங்க சிம்மாசனங்கள் முறையே 

"இரத்தின சிம்மாசனம்", 

"வீர சிம்மாசனம்",

"வெரிகோட்டி சிம்மாசனம்",

"இராய சிம்மாசனம்" என்பன ஆகும்.

இவைகளில்

இரத்தின சிம்மாசனம் காசிக்கு அருகிலுள்ள "சகரை" என்ற இடத்தில் இருக்கின்றது.

வீர சிம்மாசனம் கிருஷ்ணா ஜில்லாவில் " முதனூர்" என்ற இடத்தில் இருக்கின்றது. 

வெரிகோட்டி சிம்மாசனம் அனந்தபூர் ஜில்லாவில் 'பெனுகொண்டா" என்ற இடத்தில் இருக்கின்றது.

இராய சிம்மாசனம் வட ஆர்க்காடு ஜில்லாவில் "படவேடு" என்ற இடத்தில் இருக்கின்றது. இந்த சிம்மாசனங்களின் தலைவர்கள் அரசருக்குரிய சிறப்பை உடையவர்கள் ஆவர்

சிம்மாசனபதிகளின் ஆட்சி முறை:-

சிம்மாசனங்களின் ஆட்சி பல பிரிவுகளாக அமைந்திருக்கிறது, அவை

"ஸ்தலங்கள்', 

"வளநாடுகள்",

"கட்டமனைகள்", "கிராமங்கள்" என்று கூறப்பட்டன..

ஸ்தலங்களின் தலைவர்கள் "பட்டக்காரர்" என்றும்,

வளநாடுகளின் தலைவர்கள் "தாய்மனை செட்டிதனக்காரர்" என்றும்,

கட்டமனைகளின் தலைவர்கள் "கட்டமனை செட்டிதனக்காரர்கள்" என்றும், 

கிராமங்களின் தலைவர்கள் "செட்டிதனக்காரர்கள்" என்றும், 

இவர்களுக்கு ஆலோசனைகள் கூறி நிர்வாகத்தில் உதவியாக இருப்பவர்கள் "பெத்தர்கள்" என்றும்,
பெத்தர்களின் தலைவர் "கட்டமனை பெத்தர்" என்றும், 
இவர்கள் அனைவருக்கும் உதவி பணிகளை செய்பவர்கள் "சேஷராஜு" என்றும் அழைக்கப்படுகின்றனர்

குரு பீடங்கள்:-

தேவாங்க குரு பீடங்கள் முறையே "காசி மடம்",

"ஸ்ரீ சைல மடம்",

"ஹேமகூட மடம்", "சோணாசல மடம்",

"சம்புசைல மடம்", என்பனவாகும்.

இவற்றுள் காசி மடம் 'காசியில் சித்தேஸ்வர் கட்' என்ற இடத்தில் உள்ளது.

ஸ்ரீ சைல மடம் 'ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவிலுக்கு வடபுறத்தில்' உள்ளது. ஹேமகூடமடம் 'பல்லாரி ஜில்லாவில் ஒசுப்பேட்டைக்கு ஏழு மைல் தொலைவில் பம்பா நதிக்கரையில்' உள்ளது.

சோணாசல மடம் முதலில் திருவண்ணாமலையில் இருந்து பின்னர் 'வடஆர்க்காடு ஜில்லா படவேடு' என்ற இடத்தில் உள்ளது.
சம்புசைல மடம் 'கொள்ளேகாலத்திற்கு' அருகில் உள்ளது.

சம்புசைல மடத்திலிருந்து தேவாங்க குல பிரச்சாரத்திற்காக வந்த ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகளால் 'சேலம் ஜில்லா ஜலகண்டாபுரத்தில்' தேவாங்க குருபீடம் ஒன்று அமைக்கப்பட்டது

தேவாங்க குல ஆட்சி வரிசை முறைமை:-

1) ஜகத்குரு
2) சிம்மாசனாதிபதி
3) பட்டக்காரர்
4) தாய்மனை செட்டிகாரர்
5) கட்டமனை செட்டிகாரர்
6) செட்டிகாரர்
7) பெத்தர்
8) சேஷராஜ்
9) பங்கள மக்கள்

இதுவே நமது ஆட்சிமுறைமை ஆகும்.

சபையில்(பங்களத்தில்) அமருகின்ற போது செட்டிகாரர் போன்றோர் தலையில் தலைப்பாகையுடனும், மற்றவர்கள் தலைப்பாகை இல்லாமலும் அமர வேண்டும்.
நமது ஆட்சி முறை சீரோடும், சிறப்போடும் இருந்ததால் தான் அக்பர் மகாசக்ரவர்த்தியும் நமது ஆட்சிமுறையைப் பின்பற்றினார் என்றும் அவரிடமிருந்து ஆங்கிலேயர் பின்பற்றினர் என்பதும் சரித்திரம்.

Image: 
Categories: 
Share Share
Scroll to Top