88929 25504
 
  • Total Visitors: 3753161
  • Unique Visitors: 310164
  • Registered Users: 35966

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

ஆமோதி நகரம் / ஆமோத நகரம்

தேவல முனிவரின் வரலாற்றின் படி தேவல முனிவர் ! மன்னுபுகழ் இமயமலைக்குத் தெற்க்கே புண்ணியத்தின் வடிவமான பரத கண்டத்தில், எல்லா வளங்களும் நிரம்பிய நாடு ‘’சகர’’ நாடு. நாடென்ப நாடா வளத்தது என்னும் இலக்கணம் எல்லாம் நிரம்பியது. அந்நாட்டவர் ஓன்றினை விரும்பி வேறு நாட்டிற்குப் போக வேண்டியதில்லை. எல்லா வளங்களும் சிறப்புகளும் அங்கு உண்டு. அந்நாட்டின் தலைநகரம் ஆமோத நகர் என்ற குறிப்பு உள்ளது.

தேவலர் சகர நாட்டின் தலைநகரான ஆமோதி / ஆமோத நகரை நல்லாட்சிசெய்து வந்தார் என்பதும் தேவாங்கர்களின் ஜென்மஸ்தானம் (ஆதியில் வாழ்ந்த ஊர்) ஆமோதி / ஆமோத  நகரம் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆமோதி / ஆமோத நகரம் காசிக்கு அருகிலுள்ள ஓர் ஊர் என்றே சொல்லப்படுகிறது. இந்நகரம்  இமயமலைக்குத் தெற்கே இருந்ததாகவும் புலப்படுகிறது.

ஆமோதி  "அமீதி" என்று மருவியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. 

காசிக்கும்  (வாரணாசி) லக்னோவிக்கும் இடையிலுள்ள இன்றைய அமீதியே அன்றய ஆமோத அல்லது ஆமோதி நகர் என்ற ஐய்யப்பாடும் உள்ளது. அமீதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மாவட்டம். காசியும் அதே மாநிலத்தின் ஒரு நகரம் . காசிக்கு சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இன்றைய அமீதி  இருந்தபோதிலும் தென்னிந்தியாவிலுள்ளோர் ஆமோத / ஆமோதி நகரை சுட்டிக்காட்ட காசிக்கு அருகில் என்று குறிப்பிட்டிருக்கலாம் என்ற ஐய்யப்பாடும் உள்ளது.  

அன்றய ஆமோத / ஆமோதி நகரத்தின் அருகில் இருந்த மிக பழமையான உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நகரம் காசி எனவே ஆமோத / ஆமோதி நகர் காசிக்கு அருகில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் கருதப்படுகிறது. 

அமீதியும் பழமையான நகரம். பல மன்னர்கள்  அமீதியை மையமாக கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். அமீதியின் அண்மையானா பழைய பெயர் ராய்ப்பூர் - அமீதி இதன்மூலம் அமீதி என்ற பெயர்   வெகுகாலமாகவே அந்த நகரத்திற்கு வழக்கில் இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. 

மேலும் சிலர், ஆந்திர மாநிலத்திலுள்ள ஐதராபாத் என்னும் நகரமே ஆமோத நகரம் என்று கூறுகின்றனர். 

சௌடேஸ்வரி அம்மனின் புகழ்பாடும் தண்டகத்தில் "நந்தா வரமந்து நிலகொன்ன நயக்கதாம்பா" என்று நந்தவரம்  பற்றி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நந்தவரம் ஆந்திராவின் கடப்பா ஜில்லாவில் இருப்பதால், இதற்கு அருகிலுள்ள ஐதராபாத்தே ஆமோத நகரமென அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். சிலர் ஆமோதி / ஆமோத  நகரம் நேபாளத்தில் இருந்ததாகவும் கூறுகிறார்கள். 

இதுவரை நமக்கு வலுவான ஆதாரம் ஏதும் கிடைக்க வில்லை. இது இன்னும் அராச்சிக்குறியாதகவே விடப்பட்டுள்ளது. இதை பற்றி மேலும் தகவலும் ஆதாரமும் இருந்தால் கமெண்ட் செக்சனில் தெரிவிக்கவும் அல்லது world.devanga@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும். 

நன்றி !!!!!

Article By : Senthil Kumar Krishna Swamy, MCA, PGDBA, CCNA, CCNP, ITIL, ISO IEC / 20000

Image: 
Categories: 
Share Share
Scroll to Top