Error message
- Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

- Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
மன்னன் வீர வல்லாள பூபதி வழங்கிய செப்பு பட்டயம்
திருவண்ணாமலையை மையமாக கொண்டு ஆட்சி செய்து வந்த வன்னிய மன்னன் வீர வல்லாள பூபதி தேவாங்க குருவான ஸ்ரீ மத் பரமஹம்ச பரிவ்ராஜ காட்சாரிய ஜகத்குரு பண்டிதாராத்ய சுவாமி அவர்களுக்கு கொடுத்த செம்புப் பட்டய விபரம்.
இந்து/சனாதன தர்மத்தின் மீது எல்லை இல்லாத பற்று கொண்ட மன்னன் வீர வல்லாள தேவரும் குடிமக்களும் நம் தேவாங்க குருவிற்கு சகல மரியாதைகளையும் செய்து போற்றி வந்துள்ளனர். பாதகாணிக்கை போன்ற மரியாதை அவருக்கு வாழங்கப்பட்டு வந்தது.
படவேடு ராய சிம்மாசனம் பண்டிதாராத்ய ஸ்வாமிகள் பாதார விந்தங்களுக்கு இந்த பட்டயம் வழங்கப்பட்டது.
இப்பட்டயம் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
பட்டயத்தின் விளக்கம் :
ஓம் ஸ்ரீ காயத்ரியை நமஹ;
ஓம் ஸ்ரீ சாவித்ரியை நமஹ;
ஓம் ஸ்ரீ சரஸ்வதியை நமஹ;
ஓம் ஸ்ரீ சூடாம்பிகாயை நமஹ;
ஸ்ரீமத் ஸ்வஸ்தி சமஸ்த லோக விஸ்தார த்ரிபுவன வனுத விக்யாத த்ராய சத்கோடி தேவதா சுவர்க்க மத்ய பாதாள லோக காயத்ரி மந்த்ர உபதேச பஞ்சவர்ண வஸ்த்ர பஞ்ச சூஸ்த்ர, நிர்மாண கர்த்த சதுஸ் சஷ்டி கலா விலாச, சன்மத ஸ்தாபனாசாரிய, நந்தித் துவஜ, சிம்ஹத் துவஜ, குசுமா கோதண்ட பஞ்சவேத பாராயண.
ஓம் ஸ்ரீ மத் அகிலாண்டகோடி ப்ரம்மாண்ட நாயக ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி வரப்பிரசாதக, பரசிவ பால சக்ஷ் க்ஷோத் பவ, ஆதிமத்யாந்த ரகித, சுயம்பு மனுர் தேவாங்க தேவப்ராம்மண ஸப்தாவதார படிவேடு ராய சிம்மாசன சோணாசல காயத்ரீ பீடாத்யக்ஷ்ய ஸ்ரீ மத் பரமஹம்ச பரிவ்ராஜ காட்சாரிய ஜகத்குரு பண்டிதாராத்ய சுவாமி சரணார விந்தங்களுக்கு வல்லாள பூபதி சோடச உபசார சாஷ்டாங்க தண்டங்கள் சமர்ப்பித்து தெரிவித்துக் கொள்வது.
இப்பிரபஞ்சத்தில் இருக்கும் சகலரும், பிரம்மச்சாரிகளாயின் மொகரி 1 1/4 லும், இல்லறத்தாராயின் மொகரி 2 1/2 வீதம் உங்களுக்குப் பாதகாணிக்கை சமர்ப்பிப்பது.
இதுவே என்னுடைய கோரிக்கையாகும்.
இங்கனம்,
வல்லாள பூபதி
வர்த்தமான க்ருத யுகாதி வருஷங்கள் 10,694 கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷம் 15- ம் திதி.
மன்னன் வீர வல்லாள பூபதி ஸ்ரீ மத் பரமஹம்ச பரிவ்ராஜ காட்சாரிய ஜகத்குரு பண்டிதாராத்ய சுவாமி அவர்களிடம் லிங்கபூஜை செய்யும் விசேஷ தீட்சையும் உபதேசமும் பெற்றுக்கொண்டார்.
இப்பட்டயத்தின் மூலம் மாமன்னர்கள் நம் தேவாங்க குருவான ஸ்ரீ மத் பரமஹம்ச பரிவ்ராஜ காட்சாரிய ஜகத்குரு பண்டிதாராத்ய சுவாமி அவர்களை பதினாறுவகை உபசாரங்களுடன் போற்றி வணங்கி வந்டுள்ளனர் என்பது தெரிகிறது. தேவாங்க குருவின் திருவடிகளுக்குப் மன்னரும் அவரின் குடிமக்களும் பாதகாணிக்கை செலுத்தி வந்துள்ளனர். நம் தேவாங்க குரு காயத்ரி மந்திர உபதேசம் செய்து வந்துள்ளார் என்பதும். தேவாங்க குருவும் நம் குல மக்களும் வேதபாராயணம் செய்து வந்தனர் என்பது இப்பட்டயத்தின் மூலம் புலப்படுகிறது. மேலும் நந்திக் கொடியும், சிங்கக் கொடியும் நம் தேவாங்க கொடிகளாக இருந்தன என்பதும் தெரிகிறது.
மன்னன் வீர வல்லாள பூபதி வரலாறு :
சுமார் அறநூறு ஆண்டுக்கு முன்பு வல்லாள மகாராஜன் என்ற திருவண்ணாமலை ஆண்ட வன்னிய குல க்ஷத்ரிய மன்னன் ஒரு சிறந்த சிவன் பக்தன் . குழந்தை பேறு இல்லாமல் பல வருடம் துயரம் அடைந்த இவருக்கு , ஈசனே அருள்பாலித்து "பிள்ளைப்பேறு வேண்டி மனத்துயரம் அடைந்துள்ள பக்தனே , நீ மனம் கலங்க வேண்டாம் . இந்த பூலோகத்தில் உன் ஆயுள் முடிவடையும் போது யாமே உமக்கு புத்திரனாக இருந்து உன் ஈமக் காரியங்களை செய்து முடிப்போம் " என்ற ஆறுதல் வார்த்தை விண்ணில் கேட்டது .
மன்னனும் பட்டத்தரசியும் எல்லையில்லா மகிழிச்சி அடைந்தனர் . இறைவனே தம் இறுதி கடனை நிறைவேற்றும் பேறு பெற்றமைக்குத் தாம் என்ன தவம் செய்தோமோ என்று நினைத்து ஆறுதல் அடைந்தனர் . மன்னரும் தொடர்ந்து தான தருமங்களை செய்து சுப போகங்களை அனுபவித்து இறைவனடி சேர்ந்தார் .
அவ்வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார் . அங்கிருந்த வன்னியப்பெருமக்கள் அருள்மிகு அண்ணாமலையானை சம்மந்திமுறை ஏற்று தலைக்கட்டு நடத்தியதாகவும் , அதனால் அவ்வன்னியர் வாழ்ந்த ஊருக்கு "சம்மந்தனூர் " என்ற பெயர் வழங்க பெற்றது என்று வல்லாள மகாராஜனின் ஈமச்சண்டகை பற்றிய நூல்கள் சொல்கின்றன .
இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் அது முதல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக நாளன்று சமந்தனூரருகில் உள்ள பள்ளிகொண்டாப்பட்டில் விழா கொண்டாடப்படுகிறது .
சுல்த்தான் படை தமிழகம் நுழைந்ததும் தமிழர்கள்
அழிவின் விளிம்பில்இருந்தனர் . பல துயரங்கள்
அடைந்தனர் . கோவில்கள் நிர்மூலமாக்கபட்டது .
அப்போது குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தென்
தமிழ்நாடுபாண்டியர் அழிவிற்கு பிறகு
அல்லோலப்பட்டது சுல்த்தானால் .
வடதமிழ்நாட்டில் மட்டும் மக்கள் வன்னிய
மன்னன் சம்புவராயன்ஆட்சியில் பாதுக்காப்பாக
இருந்தனர் . பலர் தென்தமிழ்நாடு விட்டுவடக்கே
சம்புவராயன் பகுதிக்கு பாதுக்காப்புக்காக தஞ்சம்
அடைந்த காலம்அது .
அப்போது ஹிந்து தர்மங்களை அழிக்கும் சுல்த்தானை
அழிக்க திருவண்ணாமலை ஆண்ட வீர வன்னியன்
திரு.வீர வல்லாள மகாராஜகண்டர் புறப்பட்டார் .
கிபி.1341 ஆம் ஆண்டு கண்ணனூர் குப்பம் என்னும்
ஊரில் மதுரைசுல்தானுடன் போர் நிகழ்ந்தது .
வீர வல்லாளனுடைய படையில் ஒன்றரைலட்சம்
வீரர்கள் இருந்தனர் . மதுரை சுலத்தானுடைய
படையில்ஆறாயிரம் படை வீரர்களே இருந்தனர் .
தற்போதைய குப்பம் என்னும்இடத்தில் மதுரை
சுலத்தான்கள் மீது படையெடுத்து வீரவல்லாளன்
6 மாதகாலம் முற்றுகையிட்டுருந்தான் .இதனால்
படை வீரர்களுக்குதேவையான உணவுப் பொருள்கள்
பதினான்கு நாட்கள் மட்டுமேபோதுமானதாக
இருந்த நிலை உருவானது .
இந்த நிலையில் முகமதிய படைவீரர்கள் சமாதானத்தை
கோரினர் .அதற்க்கு உடன்பட்ட மூன்றாம் வீரவல்லாளன்
குப்பம் நகரத்தின் மையப்பகுதியில் படைவீட்டை
அமைத்துக்கொண்டு தங்கினான் . அப்போதுவஞ்சப்
போர் நிகழ்த்தி , வீரவல்லாளனை சுல்த்தான்கள் கொலை
செய்தார்கள் .
தலைவன் இல்லாத படை வெட்டாது என்பது போர்நெறி .
போர்முறைகளை பின்பற்றும் வீர்வல்லாளன் படை தோல்வியை
தழுவியது .. எப்படி வேண்டுமானாலும் போரிடலாம் ,
சூழ்ச்சியாலும்போரிடலாம் என்று இருந்த சுல்த்தான்
படை வீர வல்லாளனை கொன்றது .
வீரவல்லாளனை கொன்ற சுல்த்தான் படை , அவர் இறந்த
உடலில்வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள
தன்னுடையஅரண்மனையின் வாயிலில் தொங்கவிட்டான் .
இத்தனை கோரமானகாட்சியை மக்கள் கண்டதாக
மதுரையின் கிழக்கு பகுதிக்கு கோரிப்பாளையம் என்ற பெயர் வந்தது .
ஆதாரம் :
மதுரா விஜயம் நூல் ... விஜயநகர பேரரசு தமிழகத்தை வெற்றி
கொண்டவரலாறு உள்ள நூல் .இந்நூலை இயற்றியவர்
கங்காதேவி என்னும்விஜயநகர பேரரசின் அரசியார் .
திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்தில் , வன்னிய மன்னர் வீர வல்லாள மகாராஜா கண்டர் அவர்களுக்கு ஈசனே மகனாகப் பிறந்த கதையை சொல்லும் அருணாச்சலேசுவர புராணத்தின் கதையம்சத்தை கோபுரத்தில் சிலையாக வடித்துள்ளனர்.
Categories: