88929 25504
 
  • Total Visitors: 3752371
  • Unique Visitors: 310004
  • Registered Users: 35966

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

நந்திக் கொடி :

நந்திக் கொடி : 

சவுடேஸ்வரி விழாவின்போது வீரகுமாரர்களின் கையில் கங்கணமும், ஜந்தடி கத்தியும்,  முதுகுக்கு பின்னால் லிங்க வடிவில் படல்  போன்ற அமைப்பு கொண்ட ஒன்றை  கட்டியிருப்பதை காணமுடியும். அந்தப் படலில் லிங்கம், சூரியன், சந்திரன் உருவங்களும் அதன் மேல்  நந்திக் கொடி பறந்துக்கொண்டிருப்பதயும் காணமுடியும். 

நந்திக் கொடியின் வரலாறு 

அனைத்து லோகத்திற்கும் ஆடை  வழங்கி அருளிய தேவலரை சிவபெருமான் வாழ்த்தி வரமாக சுசந்திரகம் என்னும் வாளும், நந்திக் கொடியும் கொடுத்தார். மூவுலகத்திற்கும் ஆடை வழங்கி அருளிய  தேவலர் அரக்கர்களுக்கு  ஆடை வழங்கவில்லை . ஆடை வழங்க மறுத்த தேவலரின் செயலால் கடும் கோபம் கொண்ட அரக்கர்கள் அடிக்கடி தேவலோகத்தின் மீது போர் தொடுக்கலாயினர் .

அரக்கர்களால் தேவலோகத்திக்கும் இந்திரனுக்கும் தொல்லை நேரும்போதல்லாம் தேவலர் தன்னுடன் இருக்கும் ஆயுதங்களை கொண்டு அரக்கர்களுடன் போரிட்டு அரக்கர்களை வென்று தேவர்களுக்கு உதவி வந்தார். இதனால் கலக்கம் கொண்ட அரக்கர் தலைவனான வச்சிரதந்தன், தேவலர் வெற்றிபெறுவதின் காரணமாக இருப்பது நந்தி கொடி தான் என்பதை உணர்ந்து  தன் மைத்துமைத்துனனான மாயாவி வித்யுந்தேசனிடம் ஆலோசனை கேட்கலானான். 

மாயாவி ஒரு தேவகுமாரன் வேஷத்தில் போய் தேவலரிடம், அரக்கர்கள் மீண்டும் படையெடுத்து வந்துவிட்டார்கள். உங்களை அடிக்கடி கஷ்டப்படுத்த இந்திரன் நந்திக்கொடியை மட்டும் வாங்கிகிட்டு வரச்சொன்னார்னு சொல்லி அப்பாவி தேவலரை ஏமாற்றி கொடியை வாங்கி வந்துட்டான்.. 

அதன் பின்னால் தேவலோகத்தின் மேல அரக்கர்கள் மறுபடியும் படையெடுத்தாங்க, தேவர்கள் வெற்றி மப்பில இருந்தாங்க. நந்திக் கொடியை வச்சிரதந்தன் ஏவினதும் ஒன்றும் செய்ய முடியாமல் தேவலருக்கு மீண்டும் தூது பறந்தது.

தேவலர் ஏதோ சூது நடந்ததை புரிஞ்சுகிட்டார். இருந்தாலும் போருக்கு புறப்பட்டார். அனைத்து தேவர்களும் ஓடிப்போயிட தேவலர் மட்டும் வீராவேசமா போரிட.. கடைசியா நந்திக்கொடியின் உதவியால அரக்கர்கள் தேவலரை சிறைபடுத்தினான்.

தோல்வி நிச்சயம் தெரிஞ்சாலும் வீரமா சண்டை போட்ட தேவலரை வச்சிரதந்தனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.(தேவர்களுக்கும் தேவலருக்கும் இதாங்க மிகப் பெரிய வித்தியாசம்) அவரை தனக்குச் சமமா நடத்தி தன் வளர்ப்பு மகள் அக்னிதத்தையை அவருக்கு திருமணம் செய்து வைத்தான். (அக்னியோட மகளைத்தான் வச்சிரதந்தன் வளர்த்து வந்தான்)

அக்னிதத்தைக்கும் தேவலருக்கும் மூணு குழந்தைகள் பிறந்தன, அவர்களுக்கு ஆடை நெய்யும் வித்தையைக் கற்றுக் கொடுத்து அசுரர்களுக்கும் ஆடை கொடுத்தார் தேவலர்.

தேவலரோட பெருந்தன்மையையும், வீரத்தையும் பார்த்து மகிழ்ந்த வச்சிரதந்தன் சகல மரியாதையோட நந்திக் கொடியை கொடுத்து அவரை சகர நாட்டுக்கு திருப்பி அனுப்பினான்.

ஆக நந்திக் கொடி வீரத்திற்கும் பெருந்தன்மைக்கும் சகலரையும் சமமா கருதுவதற்குமான எங்கள் குல அடையாளம். பல்லவர் கொடி நந்திக் கொடின்னு சொல்லுவாங்க. ஆனால் கிருஷ்ண தேவராயர் காலத்தில நல்ல மதிப்போட நடத்தப்பட்ட இம்மக்க்ள் அவரோட ஆட்சிக்காலத்தில பல் இடங்களுக்கும் பரவி இருக்காங்க

இவர்களுக்குள்ள மிகச் சிறந்த கட்டுப்பாடு இருக்கு. செட்டிக்காரர், தாய்மனை செட்டிக்காரர், பங்களம், இப்படி கட்டுப்பாடான குலம்.

அந்தக் கட்டுப்பாடு பண்டிகை கொண்டாட்வதிலும் மிக மிக அதிகமா இருக்கும். 700 குலம்னாலும் முஸ்லீம்கள் பிரச்சனைகள் வந்தப்ப நான்கு குலத்தவர்கள் அம்மன் சிலைகளை பத்திரமா பாதுகாத்தனர்..

சதானந்த மஹரிஷி கோத்திரம் - இருமனேரு
கௌசிக மஹரிஷி கோத்திரம் - ஏந்தேலாரு
அகஸ்திய மகரிஷி கோத்திரம் - லத்திகாரரு
வரதந்து மகரிஷி கோத்திரம் - கப்பேலாரு

அதற்குரிய மரியாதையாக நான்கு நாள் திருவிழாவுக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு குலமக்கள் வீட்டு மரியாதை நடக்கும்

இன்னிக்கு ஏந்தேலார் வீட்டு அம்மன் அழைப்பு.. 

இருமனேரு என்பவர்கள்தான் 10000 பேரில் மூத்தவர் என்பதால் அவர்கள்தான் செட்டிக்காரர்கள். எந்த விழாவும் அவர்கள் குலத்தில் ஒரு ஆள் கலந்துக்காமல் நடக்காது

சக்தி அழைப்பை விட சாமுண்டி அழைப்பு கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.

மனிதருக்கு அருள் வந்து பார்த்திருக்கோம். அறிவியல்காரங்க அது ஒரு ஹிஸ்டீரியா அப்படிம்பாங்க, ஆனா குதிரைக்கும் அப்பப்ப அருள் வந்திடும். அதைச் சமாளிச்சு அழைத்துவருவது அவ்வளவு சுலபமில்லை.. 

மனிதர்கள் கடவுளைச் சுமக்கும் போது இல்லாத பக்தி, குதிரை சுமக்கும்பொழுது மக்களுக்கு அதிகமாவே வருது. எக்கச்சக்கமான பூஜை.. மனுஷனை மனுஷன் எந்த அளவுக்கு மதிக்கிறான் என்பதற்கு உதாரணம் மாதிரி,,

பானகம் கொடுத்து வீர குமாரர்களை உற்சாகப்படுத்துவது.. மஞ்சள் நீர் ஊத்தி குளிர்விக்கிறது இப்படி மக்களின்ன் வரவேற்பு சாமுண்டி அழைப்புக்கு அதிகம்தான்.

எல்லாத்தையும் விடுங்க.. 

கடைசியா அம்மன் கோவில் சேரும் போது வரிசையா வீரகுமாரர்கள் படுத்து வாழைக்காய் வெட்டி அனைவரையும் அம்மன் தாண்டிச் சேரும் போது ஏற்படும் ஆவேசம் இருக்கே.. அதற்கு இணையா எதையுமே சொல்ல முடியாது. தேர்தலில் 234 தொகுதியையும் ஜெயிச்சவங்க கூட அவ்வளவு உணர்ச்சிகரமா கொண்டாட மாட்டாங்க..

http://i326.photobucket.com/albums/k413/stselvan/banana.jpg

Categories: 
Share Share
Scroll to Top